பொங்கல் விழா - 2025
January 11, 2025
பொங்கல் விழா அறிக்கை ------------------ சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழாவானது 11.01.2025 அன்று காலை 9.30 மணியளவில் கல்லூரி முதல்வர் அருட் தந்தை மைக்கேல் ஆரோ அவர்கள் தலைமையில் காலை மன்றத்துடன் ஆ ரம்பமானது. இதில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் யா. லலிதா அவர்கள் பொங்கல் விழா பற்றிய கருத்துக்களை எ டுத்துக்கூறினார்கள். தொடர்ந்து துறை வாரியாக பொங்கல் மற்றும் பாரம்பரிய உ ணவுத்திருவிழா நடத்த ப்பட்டது. தொடர்ந்து தமிழர்களின் பா ரம்பரிய விளையாட் டான பானை உடைத்தல் நடைபெற்றது. சுமார் 12.00 மணியளவில் பொங்கல் சிறப்புக்கூ ட் டமானது கல்லூரியின் தளாளர் மற்றும் செயலர் பேரருட் தந்தை ஆன்றனி ஜோஸ் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது, சிறப்பு விருந்தினராக சதக் அப்துல்கலா கல்லூரி திருநெல்வேலி, தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ஞா. அந்தோணி சுரேஷ் அவர்கள் பங்கேற்று "இன்றைய சூழலில் தமிழர் பண்பாடு மதிக்கப்படுகிறதா? அல்லது மறைக்கப்படுகிறதா? என்னும் தலைப்பில் நடைபெற்ற விவாத மேடையை சிறப்பாக நடத்தி அனைவரையும் மகிழ்வித்தார்கள். நிகழ் வில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக்கேல் ஆரோ அவர்கள் பொங்கல் சிறப்புரை மற்றும் அருட்தந்தை அஜின் ஜோஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் கூ றினார்கள், கல்லூரி யின் தாளாளர் மற்றும் செயலர் பேரருட் தந்தை ஆன்றனி ஜோஸ் அவர்கள் வாழ்த்துரை மற்றும் அருட் தந்தை அஜின் ஜோஸ் அவர்களுக்கு வாழ்த்தும் வழங்கினார்கள்.பின்னர் அருட்தந்தை அஜின் ஜோஸ் அவர்களுக்கு வாழ்த்துப் பாடலுடன் அணிச்சல் வெட்டி சிறப்பிக்கப்பட்டது. அருட்தந்தை அஜின் ஜோஸ் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள். விழாவில் மாணவிகளின் கிராமிய நடனம் இடம் பெற்றது, அத்துடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக இயற்பியல் துறை மாணவி செல்வி டெர்லின் ஜெய பென்சி நன்றி கூற நாட்டுப்பண் ணுடன் விழா இனிது நிறைவடைந்தது